நிதிக்கிளை
வலயக் கல்விப் பணிமனை ஒன்றினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வகை சேவைகளும் முறையாக இடம்பெறுவதற்குத் தேவையான நிதி முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் பிரிவு நிதி முகாமைத்துவப் பிரிவாகும். குறிப்பாக, கல்வி அபிவிருத்தித் திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு இப்பிரிவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பணிக்குழுக்களுக்குமான சம்பளக் கொடுப்பனவு, மற்றும் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குதல் நிதி முகாமைத்துவப் பிரிவின் பிரதான பணியாகும். அதேவேளை நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற பொருட்கள், சேவைகள் கொள்வனவு மற்றும் பல்வேறு கருமங்களுக்கான நிதி வழங்கல் உட்பட ஏராளமான பணிகள் இப்பிரிவின் பொறுப்புகளில் அடங்கும். கணக்காளர் ஒருவரின் அறிக்கைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையில் நிர்வகிக்கப்படும் இப்பிரிவினால் நிதி தொடர்பான அறிக்கைப்படுத்தல் மற்றும் நிதிச் சேவைகளை வழங்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கையின் நிதிப்பிரமாணங்கள், சுற்றுநிருபங்களுக்கு அமைவாக எமது வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் பணிபுரியும் அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் எமது வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் அனுமதிக்கப்பட்ட நிதித்தேவையினை பூர்த்தி செய்வதற்காக பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
1. வருடாந்த நிதி மதிப்பீட்டினை தயாரித்து உரிய காலத்தில் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளுதல்.
2. வலயத்திற்குட்பட்ட கல்வி, கல்விசாரா ஊழியர்களின் வேதனங்களை உரிய திகதியில் வழங்குதல்.
3. ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு, பிரயாணச் செலவுக் கொடுப்பனவு மற்றும் ஏனைய செலவுகளை பரிசீலனை செய்து கொடுப்பனவை மேற்கொள்ளல்.
4. ஆசிரியர்கள், மாணவர்களின் வாண்மை விருத்திக்காக மேற்கொள்ளப்படும் செயலமர்வுகளுக்கான கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தி வழங்குதல்.
5. வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் நிதிமுகாமைத்துவத்தினை கட்டுப்படுத்துவதற்காக நிதி ஆவணங்களை பரிசீலனை செய்தல்.
6. தரம்5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையினை உரிய காலத்தில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
7. மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்குரிய கொடுப்பனவுகளை உரிய காலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்தல்.
8. பாடசாலையில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டிடநிர்மாணம், திருத்த வேலைகளுக்கான கொடுப்பனவுகளை பரிசீலனை செய்து வழங்குதல்.
9. பாடசாலைகளின் பொருட் கணக்கெடுப்பை உரிய காலத்தில் நடத்துதல், பொருள் இருப்பினை சமப்படுத்தல், பதிவேட்டிலிருந்து நீக்குவதற்கான சிபாரிசுகளை வழங்குதல்.
10. பாடசாலைகளுக்குரிய நீர், மின்சார, தொலைபேசிக் கட்டணங்களை உரிய காலத்தில் வழங்குதல்.
11. ஊழியர்களின் முற்பணக் கணக்குகள், வைப்புக்கணக்கு என்பனவற்றை கட்டுப்படுத்தலும் பராமரித்தலும்.
12. காலப்பகுதிக்குரிய நிதி முன்னேற்ற அறிக்கைகளை தயாரித்து உரிய நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தல்.
13. வருட இறுதி கணக்குகளை தயாரித்து உரிய நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தல்.
14. களஞ்சியசாலையில் உரிய சரக்கிருப்பு மட்டங்களை பேணுவதை உறுதிப்படுத்தல்.
15. நிதிப்பிரிவுடன் தொடர்புபட்ட ஏனைய செயற்பாடுகளை உரிய காலப்பகுதியில் நிறைவேற்றுதல்.
மேற்குறிப்பிட்ட பணிகளை நிதிப்பிரமாணங்கள், சுற்றுநிருபங்கள் என்பனவற்றிற்கு அமைவாக உரிய காலப்பகுதியில் நிறைவேற்றுவதன் ஊடாக எமது வலயக்கல்வி அலுவலகத்தின் நிதி முகாமைத்துவத்தினை சிறந்த முறையில் மேற்கொள்ளல்.