அபிவிருத்திப் பிரிவு (Development FrontPage)
வலயத்திற்குள் கல்வித்தரத்தை பண்புசார் ரீதியாக பேணுவதன் பிரதான பணிகள் இந்தக் கல்வி அபிவிருத்திப் பிரிவுக்குரியதாகும். இந்தப் பிரிவின் கீழ் பாடசாலைக் கலைத்திட்டத்திற்குரிய அனைத்து பாடங்களினதும் அபிவிருத்திக்குத் தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை மாணவர்களின் அடைவு மட்டத்தை ஆராந்து பாடசாலைத் தொகுதிக்கு கல்வி அபிவிருத்திக்கான தலையீடுகள் மேற்கொள்ளப்படும். பாடசாலையின் தவணைப் பரீட்சைகள், பெறுபேற்றுப் பகுப்பாய்வு, ஆசிரியர் அபிவிருத்தி, பாடரீதியான போட்டிகளை நடத்துதல் ஆகிய செயற்பாடுகளைப் போன்றே பாடசாலைகளின் கல்வித்தர மேம்பாட்டை உறுதிப்படுத்துவது தொடர்பான பொறுப்பும் இப்பிரிவுக்குரியதாகும்.
எமது வலயத்தில் கற்வி கற்கும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்குடன் பல்வேறுபட்ட கருமங்களை செயலாற்றிவருவது கல்வி அபிவிருத்திப் பிரிவாகும். அந்தவகையில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும நவீனத்துவம் பொருந்திய செயலமர்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்கம் வாண்மைத்துவமிக்க செயலமர்வுகளையும் மேற்கொண்டு வருவது எமது வயத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவாகும். அத்துடன் மாணவர்களுக்கான இணைப்பாடவிதான செயற்பதடுகளுக்கு உயிரோட்டம்கொடும் முகமாகவும் அவர்களின் திறனை வெளிக்கொனரும் நோக்குடனும் பல்வேறுவகையான கற்பித்தல், புதிய தொழிநுட்ப முயற்சிகள், விளையாட்டு மற்றும் புறக்கிருத்திய செயற்பாடுகளுக்கு மென்மேலும் வலுவடையச்செய்வதும் எமது பிரிவின் செயற்பாடுகளில் ஒன்றாகும்.
மேலும் பாடசாலைமட்ட, கோட்டமட்ட மற்றும் வலயமட்ட இணைப்பாடவிதானம் சார் போட்டிகளை நடாத்துதல் மற்றும் பாடசாலை தவணைப்பரீட்சை புள்ளிப்பகுப்பாய்வு செய்து அதற்கான பரிகார செயற்பாடுகளை மேற்கொள்ளுதலும் அத்துடன் பாட இணைப்பாளர்களையும், வளவாளர்களையும் பயிற்றுவித்தல் அத்துடன் ISA,ADE ஆகியோர் ஊடாக வருடாந்த அமுலாக்கல் திட்டத்தினை தயாரித்து பாடசாலையில் அமுல்படுத்தலும் இந்த பிரிவினுடைய முக்கிய செயற்பாடுகளாக அமைகின்றன எனலாம்