திட்டமிடல் பிரிவு (Planning Branch)
கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளைப் பராமரித்தல். தேவைக்கேற்ப பயன்படுத்துதல், பகிர்ந்தளித்தல், பகுப்பாய்வு செய்தல் பேன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது இத்திட்டமிடல் பிரிவினாலாகும். கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை நிர்வாகச் செயற்பாடுகள் போன்றே வலயக்கல்வி பணிமனையின் நிருவாகம் தொடர்பான செயற்பாட்டுத் திட்டம் மற்றும் செலவுமதிப்பீடு தயாரித்தல் என்பன இப்பிரிவின் பிரதான பொறுப்பாகும். வலயத்தினுள் நிதியுதவிச் செயற்திட்டங்கள், கல்வி ஆய்வுச் செயற்பாட்டை ஒன்றிணைப்பதற்காகப் பங்களிப்புச் செய்தலும் திட்டமிடல் பிரிவின் பணிகளில் அடங்கும்.
வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பிரிவினது செயற்பாடுகளாவன வலயத்தின் பாடசாலைகளின் பௌதீக, மனித வளங்களை திட்டமிட்டு வழங்குவதுடன் வலயத்தின் கல்வி வளர்ச்சியினை திட்டமிடலும் வழிநடத்துதலும் ஆகும். அத்துடன் நீண்ட கால அடிப்படையில் கல்வி மேன்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை முன்மொழிதலும் பாடசாலை கல்வி சார் ஆளனியினை சமமாக பகிர்ந்தளித்து, கல்வியின் குறிக்கோள்களை குறுகிய கால நீண்ட கால அடிப்படையில் அடைவதற்கான மூலமாக தந்திரங்களை திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும்.
வலயத்தின் அனைத்து தரவு தளங்களையும் திரட்டி ஒழுங்குபடுத்தி அவற்றினை கோவைகளிலும் கணினிகளிலும் பேணுதலும் இற்றைப்படுத்தலும் மற்றும் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை மற்றும் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு கல்வி வளர்ச்சியினை ஒப்பீட்டு ஆய்வு செய்து அவற்றினை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களை மேற்கொள்ளல். பாடசாலைகளின் வளர்ச்சியினை அடிப்படையாக கொண்டு தரமேம்படுத்தல் திட்டங்களை மேற்கொள்ளல். (பாடசாலைகள் தரமுயர்த்ததல், புதிய பாடசாலைகளை உருவாக்குதல்) பாடசாலையின் வளர்ச்சியின் பொருட்டு பிறநிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுதலும் செயற்பாடுகளை அமுல்படுத்தலும் இந்த பிரிவின் செயற்பாடுகளாகும்.