கல்வி முகாமைத்துவம்
தேசிய கல்வி கொள்கைக்கேற்ப பாடசாலையில் கல்வி கற்பவர்களினதும் பாடசாலை அமைந்துள்ள பிரதேச சமூகம் எதிர்பார்க்கும் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில் பண்புசார் கல்வியை பெற்றுகொள்வதற்காக வினைத்திறனான முகாமை செயற்பாடுகள் மூலமாக பாடசாலைகளை பலப்படுத்துதலும் பாடசாலையின் முழுச் சமூகத்தினரையும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் பங்களிக்கச் செய்தலும், அதிபர் ஆசிரியர் ஏனைய பௌதீக வளங்களை உச்ச பயனை பெறும் வகையில் வினைத்திறனுடன் செயற்படும் ஆற்றலை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும். தேசிய கல்வி கொள்கைக்கேற்ப பாடசாலையில் கல்வி கற்பவர்களினதும் பாடசாலை அமைந்துள்ள பிரதேச சமூகம் எதிர்பார்க்கும் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில் பண்புசார் கல்வியை பெற்றுகொள்வதற்காக வினைத்திறனான முகாமை செயற்பாடுகள் மூலமாக பாடசாலைகளை பலப்படுத்துதலும் பாடசாலையின் முழுச் சமூகத்தினரையும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் பங்களிக்கச் செய்தலும், அதிபர் ஆசிரியர் ஏனைய பௌதீக வளங்களை உச்ச பயனை பெறும் வகையில் வினைத்திறனுடன் செயற்படும் ஆற்றலை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும். இதன் ஒரு செயற்பாடாக வலயத்திலுள்ள பாடசாலைகளை வெளிவாரி மதிப்பீட்டை மேற்கொள்ளுதலும், தொடர் மதிப்பீடுகளை செய்வதனூடாக பாடசாலைகளின் பண்புத்தரத்தை மேம்படுத்தலும், வெளிப்படைதன்மை உள்ளதாக மாற்றுதலும் தொடர் செயற்பாட்டை மேற்கொள்ளுதல். மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை இனங்காணலும், விருத்தி செய்தலுக்கான பயிற்சி செய்து போட்டிகள் நடாத்தி சாதனை மட்டத்தை எய்தச் செய்தல். மாணவர் ஜனாதிபதி புலமைப் பரிசில்கள், தரம் 5 புலமைப்பரிசில்கள் இசுபஹ புலமைப்பரிசில்களை உரிய காலத்தினுள் பெற்றுக் கொடுத்தல்; மாணவர் சீருடைக்கூப்பன் பாதணிக்கூப்பன் தரவுகளை இற்றைப்படுத்தலும் இவிநியோகித்தலும். அதிபர்களின் பாடசாலைசார் முகாமைத்துவத்தினையும் ஆசிரியர்களின் வகுப்பறை முகாமைத்துவத்தினையும் மேம்படுத்தி உயர் நிலைக்குக் கொண்டு செல்வதனூடாக அதிபர் ஆசிரியர், விருதுகளை மதிப்பீடு செய்து (குரு பிரதீபா )விருதுகளை பெற உதவுதல்.