வலயக் கல்விப் பணிப்பாளரின் செய்தி
Update announcement from the Zonal Director of Education.
மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான புதிய செய்தி
2020ம் ஆண்டு சவால் மிக்க ஆண்டாக அமைந்த போதும் உங்களது அனைவரதும் ஒத்துழைப்பினால் அவ்வாண்டை வெற்றி கொண்டோம். தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் COVID - 19 நிலவிய போதும் 11% அதிகரிப்பை பெற்றோம். தற்போது வெளிவந்துள்ள க.பொ.த (உ/த) பெறுபேறுகளும் மகிழ்ச்சிகரமானவையே வரப்போகும் க.பொ.த (சா/த) பெறுபேறுகளை நினைத்தும் நாம் கலங்கவில்லை. ஏனெனில் உள்ளேயும் வெளியேயும் இருந்து இவ்வலய பிள்ளைகளுக்காக அர்ப்பணித்த அனைவரதும் ஒத்துழைப்பு எமது இதயம் நிறைந்த நன்றியறிதலுக்குரியது.
2021ம் ஆண்டு மேலும் சவால்மிக்கதாகி விட்டதனால் கடந்த ஆண்டில் வெற்றிபெற்ற பிள்ளைகள், தோல்வியடைந்த பிள்ளைகள் அந்நிலைமைக்கு தள்ளப்பட எது காரணியாக அமைந்தது என்பதை உணர்ந்து காலத்தின் தேவைக்கேற்ப உங்களை மாற்றியமைத்துக் கொண்டு மாற்று வழிமுறையில் தொடர்ந்து கற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். அரசின் சுகாதார கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றுவதுடன் கல்வியை இழக்காமல் இருப்பது நமது தேவையாகும். உங்கள் வீடு பாடசாலையாகட்டும்.
தி.ரவி
வலய கல்விப் பணிப்பாளர்,
கல்குடா வலயம்.