Assign modules on offcanvas module position to make them visible in the sidebar.

Don't have a credit card yet?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt.

Upcoming Projects. ******Online competitions each Grades***** **** Certificate ceremony for online quiz competition ****

13_வருட_உறுதிப்படுத்தப்பட்ட_கல்வி_நிகழ்ச்சித்_திட்டம்

இம்முறை G.C.E(O/L) 2017 பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களின் கவனத்திற்கு அனைத்துப்பாடங்களிலும் W என்ற சித்தியின்மையினைப் பெற்றிருந்தாலும் உயர்தரம்( A/L) இரண்டு வருடங்கள் கற்று பல்கலைக் கழகம் சென்று பட்டம் பெறுவதற்கான சந்தர்ப்பத்தினை தற்போது கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. இதன்விபரம் பின்வருமாறு

13 Years Guaranteed Education Program in 2018 - Phase II


தற்போது உள்ள.Bio, Maths, Commerce, Arts, E-Tech, B-Tech என்ற 6 பிரிவுகளுக்கும் மேலதிகமாக 7 ஆவது பிரிவாக தொழில் பிரிவு( Vocational Stream) ஆரம்பிக்கப்படவுள்ளது, அது இம்முறை O/L பரீட்சைப் பெறுபேற்றினைப் பெற்ற உயர்தரத்திற்கு இணையவுள்ள 2018/2020 ஆம் ஆண்டின் மாணவர்களுக்கே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு O/L பரீட்சைப்பெறுபேறு கவனத்திற் கொள்ளப்படமாட்டாது, (all F/W உம் கற்கலாம், இரண்டு வருட கற்கை நெறியாகும் ஒவ்வொரு வருடத்திலும் 3 தவணை 2 வருடத்திலும் மொத்தம் 6 தவணைகளாகும், 1ஆம் வருடத்தில் ( first year) 1 ஆம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 9 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் இப்பாடங்களை( உ+ம்:- தமிழ்,சிங்களம்,ஆங்கிலம்,தொழில்வழிகாட்டல்கள்,உளவியியல்,ICT,தொழில் நுட்பம் இன்னும் பல......) கட்டாயம் எடுத்தாகவேண்டும் இதில் தெரிவு கிடையாது.36878504 1019629361524189 2536630083272048640 n

@ First year இல் மீதமாகவுள்ள 2 ஆம்,3 ஆம் தவணைகளில் 26 பாடங்களில்(உ+ம்:- QS, Web disining, ICT, பொறியியல், மின்னியியல், பிளம்பிங், Hotel Managment,பெண் அலங்காரம் போன்ற இன்னும் சில பாடங்கள்.......)இதில் கட்டாயம் 3 பாடங்களினை எடுத்தாக வேண்டும்.

2 ஆம் வருடம்(2 nd year)
@1 ஆம் வருடத்தில் 2 ஆம்,3 ஆம் தவணையில் எடுத்த மூன்று பாடங்களிலும் ஏதாவது ஒரு பாடத்தினை தெரிவு செய்து 2 ஆம் வருடம் முழுவதும் அப்பாடம் ஒன்றினையே கற்று உயர்தரப் பொதுப்பரீட்சையில் அப்பாடமொன்றிலையே பரீட்சை எழுதி பல்கலைக் கழகம் செல்ல முடியும் உதாரணமாக 2 ஆம் வருடத்தில் QS என்ற ஒரு பாடத்தினைக் கற்ற ஒருவர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற முடியும்.

@ தற்போது பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்( UGC) அங்கிகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக் கழகமொன்று றட்மலாணையில் தொழில் பிரிவு பல்கலைக் கழகமாக தொழிற்பட்டுக்கொண்டு வருகின்றது இலங்கையில் ஏலவே 40 இற்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
@2020 இல் சகல பல்கலைக் கழகங்களிலும் தொழில் பிரிவு பீடம் ஆரம்பிக்கப்படவுள்ளது
@ உயர்தரப் பொதுப்பரீட்சையில் தொழில் பிரிவு மாணவர்கள் S தரத்தில் சித்தி பெற்றாலும் பல்கலைக் கழகந்தான் போக முடியா விட்டாலும் NVQ Level 4 (National Vocational Qualification Level 4) இனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

36861996 1019629461524179 5995529867087577088 n
@ பல்கலைக் கழகங்களில் NVQ Level 5,6,7 முடித்துவிட்டு பட்டத்தினைப்( Degree) பெற்றுக்கொள்ள முடியும்.
@ பல்கலைக் கழகம் சென்றுதான் NVQ Level 7 இனைப் பெறவேண்டும் என்பதல்ல அம்பாறை ஹாட்லி தொழில் நுட்பக் கல்லூரி போன்ற வற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.