கோறளைப்பற்று கல்விக் கோட்டம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தின் காணப்படும் மூன்று கல்விக் கோட்டங்களில் ஒன்றே இக் ''இக் கோறளைப்பற்று கல்விக் கோட்டமாகும்'' மாவட்டக்கல்வி திணைக்கள நடைமுறையில் இருந்து கல்வி வலயங்கள் அறிமுகப்பட்ட 1998/1999ம் அண்டிலிருந்தே கோறளைப்பற்று கோட்டக்கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது இக்காலப்பகுதியில் மொத்தம் 04 கல்விக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன 2007ம் ஆண்டின் இறுதியில் மட்டக்களப்பு மத்தி வலயம் ஆரம்பிக்கப்பட பின்னர் இது மூன்றாக தற்போது காணப்படுகின்றது. இக்கோறளைப்பற்று கல்விக் கோட்டமானது வடக்கே கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவையும் தெற்கே ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவையும், கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே பொலநறுவை மாவட்டத்தினையும் எல்லைகளாக உள்ளடக்கி காணப்படுகின்றது. இக்கல்விக் கோட்டமானது ஏனைய இரு கோட்டங்களையும் விட அதிகமாணவர்களையும் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகத்தின் நிருவாகத்தின் கீழ் 40 பாடசாலைகளையும் தற்போது உள்ளடக்கியதாக இயங்கி வருகின்றது 2010ம் ஆண்டுவரையில் இக்கல்விக் கோட்டத்தில் மொத்தம் 36 பாடசாலைகளே காணப்பட்டன இருப்பினும் அதிகஸ்ர பிரதேச மாணவர்களின் நலன் கருதி இரண்டு பாடசாலைகளும் மற்றும் இசுறு பாடசாலை திட்டத்தின் மூலம் இரண்டு பாடசாலைகளும் மொத்தமாக 4 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு மொத்தமாக இக் கல்விக் கோட்டத்தில் 40 பாடசாலைகள் தற்போது காணப்படுகின்றது.