
இலங்கையில் வலயக்கல்வி அலுவலக அடிப்படையிலான புதிய கல்வி நிர்வாக கட்டமைப்பு முறைமை அறிமுகம் செய்யப்பட்ட வெளையில் கல்குடா கல்வி வலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட நான்கு(04) கல்வி கோட்டங்களில் ஒன்றே கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டமாகும்
கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டத்தின் நிர்வாக எல்லைகளாக வடக்கே மகாவலி கங்கைக்கரையின் வெருகல் பிரதேசமும் தெற்கே வட்டவான் கிராமத்தையும் கிழக்கே வங்காள விரிகுடா சமூத்திரத்தையும் மேற்கே பொலநறுவை மாவட்டத்தினையும் கொண்டமைந்துள்ளது. இக்கோட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் அளவாக 550 சதுரமைல் அல்லது 20.89 சதுர கிலோமீற்றர் ஆகும் இப்பிரதேசத்தில் மொத்தம் 7049 குடும்பங்களைச் சேர்ந்த 26136 மக்கள் வாழ்கின்றனர்.
இக்கோட்டமானது மிகவும் அடிப்படை வசதிகளற்ற போக்குவரத்து வசதிகளற்ற பல பாடசாலைகளைக் கொண்டு அமைந்துள்ளது. 85வீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளியிடங்களில் இருந்து நாளாந்தம் வருகை தந்தே கற்பிக்கின்றனர் 2010ம் ஆண்டு வரை மொத்தம் 16 பாடசாலைகளே இயங்கி வந்தன. ஆனால் தற்போது மொத்தம் 20 பாடசாலைகள் உள்ளன. கல்குடா வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து மிகவும் தொலைவில் (70 கி.மீ) அமைந்துள்ள பாடசாலைகளும் இக்கோட்டத்திலேயே காணப்படுகின்றன. கடந்த கால யுத்தத்தினாலும் "சுனாமி" போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் அழிவுகளினாலும் மிகவும் மோசமாக்க பாதிக்கப்பட்ட கல்விக் கோட்டமாகவும் கோறளைப்பற்று வடக்கு கல்விக் கோட்டம் காணப்படுகின்றது.