2026-06-18 14:10:51
கல்குடா கல்வி வலய, வலய மட்ட விளையாட்டு போட்டி – 2026
நிறைவு நாள் நிகழ்வுகள்
2026.06.12 ஆம் திகதி கல்குடா கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், BT/KK/Vantharumoolai Madya Maha Vidyalayam மைதானத்தில் வலய மட்ட விளையாட்டு போட்டி – 2026 இன் நிறைவு நாள் நிகழ்வுகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. வலயத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் வலய கல்வி பணிப்பாளர், பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், கல்குடா வலய கல்வி அலுவலக கல்வி சார்ந்த உத்தியோகத்தர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். போட்டி அரங்கம் முழுவதும் உற்சாகமான சூழல் நிலவியதுடன், மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் சிறந்த வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது
போட்டிகளின் நிறைவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலைகளுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. மேலும், வலய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தெரிவு செய்யப்பட்டனர்.
மாணவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, விளையாட்டு ஒற்றுமை, தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
Comments
0No comments yet. Be the first to comment.