Loading...

Kalkudah Zonal Education Office, Valaichenai

kal@edudept.ep.gov.lk

தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியில் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் சாதனை!

2026-11-03 13:39:47

தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியில் கல்குடா வலயக் கல்வி அலுவலகத்திற்கு மூன்றாம் இடம்!

தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியில் கல்குடா வலயக் கல்வி அலுவலகம் மூன்றாம் இடத்தைப் பெற்று வலயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த நிர்வாக முகாமைத்துவம், வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துதல், பணியிட ஒழுங்கமைப்பு, குழு முயற்சி, சேவைத் தர மேம்பாடு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் பெறுபேறாக இச்சாதனை அமைந்துள்ளது.

இவ்வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்காக அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட்ட வலயக் கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கிய கல்வி நிர்வாகத்தினருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்தச் சாதனையானது எமது அலுவலகத்தின் சேவைத் தரத்தினை மேலும் மேம்படுத்துவதற்கும், வினைத்திறனான மற்றும் பயனுறுதிமிக்க நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் உந்துசக்தியாக அமையும்.

Gallery

Comments

0

Please share respectful and meaningful comments only. Spam or abusive comments will be removed.
தயவுசெய்து மரியாதையான மற்றும் பொருத்தமான கருத்துகளை மட்டும் பதிவிடுங்கள்.

No comments yet. Be the first to comment.