History
இலங்கையின் அரசியல் யாப்பில் செய்யப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப 13வது திருத்தத்தின் அடிப்படையில் தலைநகர் கொழும்பில் மையப்படுத்தப்பட்டிருந்த அதிகாரங்கள் ஆகக்குறைந்தது மேலும் ஒன்பது இடங்களை நோக்கி பரவலாக்கப்பட்டன. அதாவது மத்திய அரசினாலும் மாகாண சபைகளினாலும் அரசியல் மற்றும் நிருவாக நடவடிக்கைகள் கையாளப்படும் விதத்தில் 1988ல் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. எனினும் மத்தியிலிருந்து மாவட்ட மட்டத்தில் கையாளப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மாகாண மட்டத்திற்குச் சென்றதுடன் மாவட்ட முறை இல்லாதொழிக்கப்பட்டு வலய கல்வி அலுவலக முறை 1998 தொடக்கம் அமுலாக்கப்பட்டது.
எனினும் கல்விசார் நடவடிக்கைகளைப் பொறுத்தவரை அன்றிலிருந்து இன்றுவரை அதானிப்போமாயின் மாவட்ட கல்விப் பணிப்பாளரின் கீழ் வலய முறைக்கு முன்பாக வட்டாரக் கல்வி அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி, ஆகிய பதவிகள் காணப்பட்டன. பின்பு மாகாண கல்விப் பணிப்பாளரின் கீழ் வரத்தக்கதாக வலய கல்விப் பணிப்பாளர் ,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகள் தற்போது காணப்படுகின்றன.
1998ல் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்ட போது கல்குடா தேர்தல் தொகுதி கல்குடா கல்வி வலயம் என அறிவிக்கப்பட்டது. இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டம் 3 கல்வி வலயங்களாக ஆக்கப்பட்டன. எமது வலயத்தில் 19% ஆன முஸ்லிம் மாணவர்களும் அப்போது காணப்பட்டதுடன் ஆசிரியர் அதிபர்களும் இருந்தனர். 2008ல் மாவட்டத்தின் சகல முஸ்லிம் பாடசாலைகளையும் வேறாக பிரித்து இலங்கையின் முதலாவது நிலத்தொடர்பற்ற கல்வி வலயம் உருவாக்கப்பட்டதால் 100% தமிழ் மாணவர்களைக் கொண்ட கல்வி வலயமாக கல்குடா வலயம் மாறியதுடன் கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டம் இவ்வலயத்திலிருந்து நீக்கப்பட்டது.
Our Zonal Directors of Education
SH.SHAHUL HAMEED 01.08.1998
S.NAGENDRAM
MPH.MOHAMED 02.07.1998
S.NAGENDRAM 06.09.1999
A.GUNARAJARETNAM 09.04.2001
S.SARAVANAPAVAN 29.06.2001
S.PACKIYANATHAN 01.04.2002
V.KANAPATHIPILLAI 05.06.2002
